டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல 40 நிமிடங்கள் போதுமாமே… எலான் மஸ்க்கின் புதிய திட்டம்!

Elon musk
Elon musk
Published on

அதிவேகமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் புதிய வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயரிட்டார். மேலும் அமெரிக்காவில் சில நாட்கள் முன்னர் தேர்தல் நடைபெற்றதில் வெற்றிபெற்ற ட்ரம்பிற்கு பேராதரவாக இருந்தார்.

இப்படியான நேரத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விரைவில் செல்லும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் எலான் மஸ்க். இதுகுறித்து எக்ஸ் லோகோ வடிவமைப்பாளர் டெஸ்லா மோட்டார்சின் இன்ஜினியர் அலெக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் கப்பல் ஒன்றில்  பயணிகள் ஏறுகிறார்கள். அது ஒரு ராக்கெட் தளத்திற்கு செல்கிறது. ராக்கெட் தளத்தில் உள்ள ராக்கெட்டில் அந்த பயணிகள் மீண்டும் ஏறுகிறார்கள். அங்கிருந்து அந்த நாட்டிலிருந்த மக்கள் மற்றொரு நாட்டிற்கு சென்றடைகிறார்கள். இதன்மூலம் 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மற்றொரு நாட்டிற்கு செல்ல முடிகிறது. அதாவது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் காலை 6.30 மணி அளவில் கப்பலில் ஏறிய பயணிகள் ராக்கெட் ஏவுதலத்திற்கு சென்று ராக்கெட்டில் ஏறியவுடன் அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஷாங்காய் நகரை அடுத்த 30 நிமிடத்தில் சென்றடைகிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!
Elon musk

இதேபோல் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்வதற்கு 45 நிமிடமும், டோக்கியோவில் இருந்து டெல்லிக்கு 30 நிமிடமும், லண்டனில் இருந்து நியூயார்க் செல்வதற்கு 29 நிமிடமும் ஆகிறது என அந்த வீடியோவின் கீழ் பயண நேரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு குறைந்தது விமானம் மூலம் 15 மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்த புதிய ஏவுகணை மூலம் செல்வதால் 40 நிமிடத்திலேயே அமெரிக்காவில் உள்ள சன் பிரான்சி ஸ்கூலுக்கு டெல்லியில் இருந்து சென்றுவிடலாம்.

இந்த வீடியோக்கு எலன் மஸ்க் இது இப்போது சாத்தியமே என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com