TNPSC; சிறை அலுவலர் பணித் தேர்வு 26-ம் தேதி நடைபெறும்!

TNPSC
TNPSC
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாளர் மையம் நடத்தும் சிறை அலுவலர் பணித் தேர்வு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் 24 மையங்களில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: 

‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த பதவிகளுக்கு வருகிற 26-ம் தேதி காலை மற்றும் மாலையில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளுர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடைபெறும்.

- இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com