ஜம்மு காஷ்மீர்: மர்மமான முறையில் இறக்கும் மக்கள்… ஒதுக்கிவைக்கப்பட்ட கிராமம்!

Jammu and Kashmir
Jammu and Kashmir
Published on

ஜம்மு காஷ்மீரில் ஒரு கிராமத்தில் மக்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதனால், அந்த கிராமம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பகுதியில் தொடர்ந்து மக்கள் இறந்தால், நோய் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம். மக்கள் இறப்பதற்கான காரணம் கிடைத்தால், அதை வெளிப்படையாக சொல்லி, அதற்கான தீர்வையும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இறப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றால், அது மர்மமான இறப்பே ஆகும்.

அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தின் பாதல் என்ற கிராமத்தில் காரணம் தெரியாமல், மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. முதன்முதலில் இந்த கிராமத்தில் வசித்து வந்த முகமது அஸ்லாமின் குடும்பத்தினருக்கு காய்ச்சல், வலி, வாந்தி, கடுமையான வியர்வை மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் உணவு விஷம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தனர், ஆனால் திடீரென்று சுயநினைவை இழந்ததாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதையும் படியுங்கள்:
அழகாய் இருப்பதால் இப்படியும் ஒரு தொல்லையா?
Jammu and Kashmir

இதன் காரணமாக, மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்த சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி, முகமது அஸ்லாம் மற்றும் அவரது 6 குழந்தைகள் உள்பட 8 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மூன்று குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மூன்று குடும்பங்களில் இருந்த நபர்களும் இறந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்:
மீன் உணவுடன் இவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் கேடுதான்!
Jammu and Kashmir

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை மட்டுமே இந்த 17 பேர் உயிரிழந்தனர். இது ஜம்மு காஷ்மீரையே உலுக்கியுள்ளது. இப்படி மக்கள் இறப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வைரஸ் பாக்ட்ரீயா போன்ற எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதல் கிராமத்தில் அண்மையில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு செய்தார். 

அந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, கிராம மக்கள் அரசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இறப்புகளின் காரணத்தை கண்டுபிடிக்கும் வரை அந்த கிராமம் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com