விஜய் படத்திற்கு சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல்!

Jana Nayagan supreme court
Jana Nayagan supreme court
Published on

ஜனநாயகன் படத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவிஎட் மனு தாக்கல் செய்தது தணிக்கை வாரியம். உச்சநீதி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது.தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையால் ஜனநாயகன் வெளியிடும் மேலும் தள்ளிப்போக உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படத்திற்கு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) சான்று வழங்க மறுத்ததால் சர்ச்சை வெடித்தது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தனி நீதிபதி படத்திற்குச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தணிக்கை வாரியத்தின் முடிவில் குறுக்கிட மறுத்துவிட்டனர்.

இந்தச் சூழலில், சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வாக மத்திய தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' (Caveat) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், "ஜனநாயகன் பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தணிக்கை வாரியத்தின் வாதங்களைக் கேட்காமல் எந்தவிதமான இடைக்கால உத்தரவோ அல்லது இறுதித் தீர்ப்போ பிறப்பிக்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், படத்தின் வெளியீடு மற்றும் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகளே உஷார்..!!இதை செய்ய தவறினால் 'இன்சூரன்ஸ்' புதுப்பிக்க முடியாது!
Jana Nayagan supreme court

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com