இந்தியர்களின் பணி நேரம் பாராட்டுதலுக்குரியது! ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனர் கருத்து..!

Japenese founder Raishi
Japenese founder Raishisource : hindu
Published on

இந்​தி​யர்​கள் பொதுவாக காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வழக்கம் பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி சமீபத்தில் தெரி​வித்​துள்​ளார்.

இந்தியா போன்ற வளரும் நாடு​களுக்கு கார் வாங்​கு​வதற்​கான தேவையான நிதி உதவியை ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் கென்யா ஹக்கி நிறு​வனம் வழங்கி வரு​கிறது. உலகில் தென்​னாப்​பிரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வில் இந்நிறுவனம் கால்​ப​தித்​து வளர்ந்துள்​ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024-ம் ஆண்டு பெங்​களூரு​வில் ஹக்கி நிறு​வனம் செயல்பட தொடங்​கியது.

இந்​தி​யா​வில் பொருளா​தா​ரத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள கோபயாஷி,’இந்தியப் பொருளாதாரம் மிக வேக​மாக வளர்​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்திய மக்​களின் எனர்​ஜியை நான் மிக​வும் விரும்​பு​கிறேன். அவர்​கள் தங்​களது எதிர்​காலத்தை பற்றி மிக​வும் நம்​பிக்​கை​யுடன் உள்​ளனர்.’என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அதிக சம்பளமுடன் மன நிம்மதியும் வேணுமா? இந்த பணிகளைத் தேர்ந்தெடுங்கள் மக்களே!
Japenese founder Raishi

மேலும்,அவர்,’இந்திய மக்கள் ஜப்​பான் மக்களிடமிருந்து வேறு​பட்​டவர்கள்.ஜப்பானில் அதிக மக்கள் வயதானவர்​களாக இருப்​ப​தால் அவர்​கள் எல்​லா​வற்​றி​லும் நிதான​மாக​வும், முன்​னெச்​சரிக்கையாகவும் செயல்பட விரும்​பு​கின்​றனர். இந்தியர்களைப்போல் அதிக ரிஸ்க் எடுக்க விரும்​புவ​தில்​லை. ’என்று கூறியுள்ளார்.

குறிப்​பாக, இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை மிக​வும் எனர்​ஜி​யுடன் பணி​யாற்​று​வதை பார்ப்​பது அவரை ஈர்த்​துள்​ளது. ஜப்​பான் பணி கலச்​சா​ரத்​துக்​கும், இந்​திய பணி கலாச்​சா​ரத்​துக்​கும் இடையே மிகப்​பெரிய வித்​தி​யாசம் உள்​ளது. ’இந்​தி​யா​வில் முதலீட்​டாளர்​கள் விரை​வாக முடி​வெடுத்து. அனைவரிடமும் நட்​புறவுடன் செயல்​படு​கின்​றனர்’என்றும் கோப​யாஷி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது​.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com