
ஜப்பானை 'சூரியன் உதிக்கும் நாடு' என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள், வேலை மீதான ஆர்வம், வாழ்வியல் தத்துவம் (இக்கிகை), மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர்கள்.ஜப்பான் ஆசிய கண்டத்தில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
ஜப்பானியர்கள் தம் பணியின் மீது மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள். மேலும், 'இக்கிகை' (ikigai) என்ற வாழ்வியல் தத்துவத்தை பின்பற்றி நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் வயிறு நிரம்ப சாப்பிடுவதைத் தவிர்ப்பது போன்ற சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளனர்.
ஜப்பானியர்கள் புதுமைகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் பெற்றவர்கள். சிலர் தனிமையை தேர்ந்தெடுத்து வாழும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். அவர்களின் இந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள் பலரால் பேசப்படுகின்றன.
இந்நிலையில் ஜப்பானில் ஷிகெரு இஷிபா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் பெரும்பான்மையை இழந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் ஷிகெரு கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, உட்கட்சியில் வாக்கெடுப்பு நடந்தது. இதன் விளைவாக லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே டகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வயது 64 ஆகும். சனே டகாய்ச்சிலிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார்.
இது ஜப்பானின் அரசியலில் ஒரு புதிய புரட்சியாக கருதப்படுகிறது. அவர் கட்சித் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு, அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் இன்று நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 465 ஓட்டுகளில், 237 ஓட்டுகளை பெற்று, சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.இதைத் தொடர்ந்து, மேலவையில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் மூலம் ஜப்பானின் புதிய பிரதமராக அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக ஒரு பெண் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்று, டகாய்ச்சி புதிய வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம், ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார். மேலும், ஜப்பான் வரலாற்றிலேயே, முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுவார். வலிமையான பெண்ணாக அறியப்படும் சனே டகாய்ச்சி, ஜப்பானின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு வளமான ஜப்பானை மறுவடிவமைத்து கொடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார். மேலும், பெண்களின் உடல்நலப் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அந்த சவாலை டகாய்ச்சி எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.மேலும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை ஜப்பான் நிறுத்த வேண்டும் என்றும், ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். அது குறித்தும் ஒரு திடமான முடிவை டகாய்ச்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான உலகளாவிய சவால்களை புதிய பெண் பிரதமர் வெற்றிகரமாக சமாளித்து விடுவார் என்றே ஜப்பானிய மக்கள் திடமாக நம்புகிறார்கள்.