
"அனைவருக்கும் காப்பீடு" என்ற தலைப்பில் IRDAI-யின் 2047 தொலைநோக்கு திட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவு செய்யும் 2047-ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மற்றும் வணிகத்திற்கும் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, மற்றும் பொது காப்பீட்டு பிரிவுகளில் காப்பீட்டை அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும், உடனடியாகக் கிடைக்கச் செய்வதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவுல காப்பீடு (இன்சூரன்ஸ்) துறை இப்போ பெரிய மாற்றத்துக்கு தயாராகுது. ஜப்பானைப் பாருங்க, அங்க 100 ரூபாய் உற்பத்தியில 10 ரூபாய் காப்பீட்டுக்கு போயிடுது. ஆனா, இந்தியாவுல வெறும் 3.7 ரூபாய்தான். ஜப்பான்ல எல்லாரும் உயிர் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வீடு-வாகன காப்பீடு வாங்குறாங்க. ஏன்னா, அவங்களுக்கு நல்ல சட்டங்களும், நம்பிக்கையும் இருக்கு. இந்தியாவுல கிராமங்கள்ல காப்பீடு பத்தி தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, இப்போ இளைஞர்கள் கிட்ட, மொபைல், இன்டர்நெட் பயன்பாடு அதிகமாகுது. இதனால காப்பீட்டு துறை வேகமா வளருது. குறிப்பா, மறுகாப்பீடு (ரீஇன்சூரன்ஸ்) துறை, இது காப்பீட்டு கம்பெனிகளுக்கு பெரிய இழப்பு வந்தா காப்பாத்த உதவுது.
ரிலையன்ஸ் குழுமத்தோட ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (JFSL) மற்றும் உலக புகழ் பெற்ற அலையன்ஸ் கம்பெனி ஒரு புது கூட்டணி ஆரம்பிச்சிருக்கு. இது 50:50 மறுகாப்பீட்டு கூட்டு முயற்சி. இந்தியாவுல எந்த காப்பீட்டு கம்பெனிக்கு பெரிய இழப்பு வந்தாலும், இந்த கூட்டணி உதவி செய்யும். JFSL-க்கு இந்திய மக்களோட தேவையும், மொபைல்-இன்டர்நெட் வசதியும் தெரியும். அலையன்ஸுக்கு 25 வருஷமா இந்தியாவுல மறுகாப்பீடு அனுபவமும், உலக அளவுல காப்பீட்டு வேலையும் தெரியும். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, 2047-ல இந்தியாவுல எல்லாருக்கும் காப்பீடு கிடைக்கணும்னு திட்டமிடுறாங்க. இதோட, பொது மற்றும் உயிர் காப்பீட்டு துறைகளிலயும் கூட்டணி வைக்கப் பேசிக்கிட்டு இருக்காங்க.
இஷா அம்பானி, JFSL-ன் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இருக்கும் ஒரு இயக்குநர். அவர் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை நேரடியாக நிர்வகிக்காவிட்டாலும், பெரிய திட்டங்களுக்கு வழிகாட்டுகிறார். அவங்க சொல்றாங்க: “இந்தியாவுல இப்போ காப்பீட்டுக்கு தேவை ரொம்ப அதிகமாகுது. மக்கள் செல்வந்தர்களாக மாறுகிறார்கள் , பண விஷயத்துல தெளிவு வருது, மொபைல்-இன்டர்நெட் வேகமா வளருது. அலையன்ஸோட உலக அளவு அனுபவமும், எங்களோட இந்திய அறிவும், மொபைல் ஆப் வசதியும் சேர்ந்து, காப்பீட்டு கம்பெனிகளுக்கு புதுமையான, எளிமையான தீர்வுகள் கொடுக்கும். 2047-ல எல்லாருக்கும் காப்பீடு கிடைக்கணும்னு நாங்க உறுதியா இருக்கோம்.” என்கிறார்.
இந்தக் கூட்டணியால மக்களுக்கு என்ன பயன்?
கிராமத்து மக்களுக்கு மலிவா காப்பீடு கிடைக்கலாம். JFSL-ன் மொபைல் ஆப் வசதியால, காப்பீடு வாங்கறதும், கோரிக்கை (கிளெய்ம்) போடறதும் எளிதாகும். விவசாயி, சின்ன கடை வச்சவங்க எல்லாம் மைக்ரோ-காப்பீடு வாங்க முடியும்.
இது பண இழப்பு வந்தாலும் பாதுகாப்பு தரும். ஆனா, கிராமங்களுக்கு இதை கொண்டு போறது, எல்லாம் வெளிப்படையா இருக்கறது, சட்ட விஷயங்களை சரியா கையாளறது முக்கியம். இந்தக் கூட்டணி வெற்றி அடைஞ்சா, வேலை வாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு மூலமா இந்திய நிதித்துறை வலுப்படும். ஆனா, கிராமங்களையும், சாதாரண மக்களையும் மறக்காம பார்த்துக்கணும்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களுக்கு மட்டுமே, முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.