ஜியோ பயனாளர்களுக்கு காத்திருக்கும் ஷாக்..! இனி ரீசார்ஜ் இல்லாட்டி இன்கம்மிங் கட்..!

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் காலாவதியானவுடன் இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
jio incoming rules|ஜியோ ரீசார்ஜ்
jio incoming rules|ஜியோ ரீசார்ஜ்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்திய டெலிகாம் சந்தையில் 524 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய மொபைல் மற்றும் முன்னணி டிஜிட்டல் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது ரீசார்ஜ் காலாவதி (Validity) விதிகளைக் கடுமையாக்கி, பிளான் முடிவடைந்தவுடன் இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளை நிறுத்தத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் வேலிடிட்டி முடிந்தால் கஸ்டமரின் எண்ணுக்கு Outgoing கால்ஸ் & மெசேஜ் சேவைகள் மட்டுமே நிறுத்தப்படும்.

ஆனால் ரீசார்ஜ் முடிந்த பிறகும் சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை இன்கம்மிங் கால் மற்றும் வங்கி OTP எஸ்எம்எஸ் சேவைகள் தொடர்ந்து கிடைத்து வந்தன. ஆனால், தற்போது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்களைப் போலவே ஜியோவும் தனது விதிகளைக் கடுமையாக அமல்படுத்துகிறது.

ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி முடிவடைந்தவுடன், அவுட்கோயிங் அழைப்புகள் மட்டுமின்றி இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளும் நிறுத்தப்படும் எனப் பயனர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. ஜியோவின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம், இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளில் ஒன்றாக விளங்குவதுடன், ட்ரூ 5ஜி (True 5G) சேவைகளையும் வழங்கி வருகிறது.

கடந்த மார்ச் 31 நிலவரப்படி இந்தியா முழுவதும் சுமார் 524.4 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதில் 268.5 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி (5G) சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

வருவாய் மற்றும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயில் (ARPU) ஏர்டெல் முன்னணியில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிராட்பேண்ட் விரிவாக்கத்தில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மொபைல் ரீசார்ஜில் தனது Prepaid கஸ்டமர்களுக்கு சில மாற்றங்களை ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி, ரீசார்ஜ் திட்டம் முடிவடைந்த பிறகு இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளைத் துண்டிக்கும் விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. இதுவரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் பல மாதங்களுக்கு இலவசமாக இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் OTP-க்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறி, தற்போது திட்டம் முடிந்த சில நாட்களிலேயே சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

ஜியோ ரீசார்ஜ் முக்கிய மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள்:

* ரீசார்ஜ் வேலிடிட்டி (Validity) முடிவடைந்த பிறகு, குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை மட்டுமே இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் SMS சேவைகள் வழங்கப்படும் என ஜியோ விதிமுறைகள் கூறுகின்றன. அதன் பிறகு எந்த நேரத்திலும் இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் வங்கி OTP-க்கள் நிறுத்தப்படலாம்.

ஜியோ
ஜியோ

* அதன்பிறகு ரீசார்ஜ் செய்யுங்கள் என்ற அலர்ட் மெசேஜ் மட்டுமே வாடிக்கையாளருக்கு வரும்.

அதாவது, நீண்ட நாட்களாக ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ‘உங்கள் எண் 'கிரிட்டிகல் சஸ்பென்ஷன்' (Critical Suspension) நிலையில் உள்ளது; உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டால் இன்கம்மிங் சேவைகள் நிறுத்தப்படும்’ என ஜியோ தரப்பிலிருந்து SMS மற்றும் அழைப்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

* இன்கம்மிங் சேவைகள் நிறுத்தப்பட்டாலும், உங்கள் சிம் கார்டு உடனடியாக நிரந்தரமாகத் துண்டிக்கப்படாது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) விதிகளின்படி, தொடர்ந்து 90 நாட்களுக்கு எந்தப் பயன்பாடும் (அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ்) இல்லாமல் இருந்தால் மட்டுமே சிம் செயலிழக்கச் செய்யப்படும். மெயின் பேலன்ஸில் ரூ.20 இருந்தால், மேலும் 30 நாட்களுக்கு எண் தக்கவைக்கப்படும்.

* இன்கம்மிங் எஸ்எம்எஸ் நிறுத்தப்படுவதால், ரீசார்ஜ் செய்யாமல் இரண்டாவது சிம்மாக (Secondary SIM) ஜியோவை வைத்திருப்பவர்களுக்கு வங்கி பரிவர்த்தனைகளுக்கான OTP பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
"வெளியான 10 நிமிடங்களில் காலியான பங்குகள்!"முதல் நாளே வரலாறு படைத்த ஜியோ IPO..!
jio incoming rules|ஜியோ ரீசார்ஜ்

* டேட்டா தேவையில்லாமல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கவும், இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் OTP பெறவும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள வாய்ஸ்-ஒன்லி (Voice-Only Plans) திட்டங்களைப் பயன்படுத்தலாம்.

* அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக Jio நிறுவனம் ரூ.147 (22 நாட்கள்), ரூ.177 (28 நாட்கள்), ரூ.448 (84 நாட்கள்) மற்றும் ரூ.1,748 (336 நாட்கள்) ஆகிய விலையில் டேட்டா இல்லாத (Voice-only) திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் ஜியோ எண்ணை இரண்டாவது சிம்மாக (Secondary SIM) பயன்படுத்தினால், எண் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க MyJio செயலி மூலம் உங்கள் எண்ணின் தற்போதைய நிலையைச் சரிபார்த்து, குறைந்தபட்ச வாய்ஸ் பிளானை ரீசார்ஜ் செய்துகொள்வது பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
மாஸ் காட்டும் ஜியோ... ரூ.299 ரீசார்ஜ் செய்தால் 2 மாதம் வேலிடிட்டி!
jio incoming rules|ஜியோ ரீசார்ஜ்

சமீபத்தில் நீண்டகால பயனர்களுக்காக ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.