மக்களுக்கு அடுத்த ஷாக்..! பெட்ரோல் லிட்டருக்கு ₹5, டீசல் ₹3 உயர்வு..!

ஜியோ பிபி மற்றும் நயாரா பங்க்குகளில் பெட்ரோல் விலை உயர்வு
petrol diesel price
petrol diesel priceimage credit-thestatesman.com
Updated on: 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிபி (Jio-bp) பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் எரிபொருள் நிறுவனமான நயாராவைத் தொடர்ந்து, தற்போது ஜியோ பிபி பங்க்குகளிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள அதன் 2,304 எரிபொருள் நிலையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, நாட்டின் மற்றொரு பெரிய தனியார் நிறுவனமான 'நயாரா எனர்ஜி' (Nayara Energy) அக்டோபர் 3 அன்று தனது 7,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் பெட்ரோல் விலையை ₹5-ம், டீசலை ₹3-ம் உயர்த்தியிருந்தது. தற்போது அதனைத் தொடர்ந்து ஜியோ-பிபி நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.

இருப்பினும், இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே தக்க வைத்துள்ளன. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் பங்குகளில் எரிபொருள் விலைக்கு இடையே பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரல் ஒன்றுக்கு 103 டாலரை கடந்து வர்த்தகமாகி வருவதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மை காரணமாகும். அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் மோதல்கள் காரணமாக, அமெரிக்க WTI மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த ஆண்டை விட முறையே 51% மற்றும் 62.5% வரை உயர்ந்துள்ளன.மேலும், சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல் மற்றும் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து உயர் மட்டத்திலேயே வைத்துள்ளன.

பெட்ரோல்
பெட்ரோல்

மாநிலங்கள் வாரியாகப் புதிய விலைகள்:

  • ஹரியானா: ஜியோ-பிபி பங்குகளில் பெட்ரோல் லிட்டருக்கு ₹109.80; டீசல் ₹97.75.

  • பஞ்சாப்: பெட்ரோல் லிட்டருக்கு ₹108.54; டீசல் ₹99.19.

  • ராஜஸ்தான்: உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல் ₹113.91 முதல் ₹117.65 வரையிலும், டீசல் ₹97.15 முதல் ₹100.78 வரையிலும் விற்கப்படுகிறது.

முக்கிய நகரங்களில் இன்றைய பொதுத்துறை நிறுவன பெட்ரோல்/டீசல் விலை நிலவரம் (மாற்றமில்லை):

  • சென்னை: பெட்ரோல் ₹107.77 | டீசல் ₹99.55

  • மும்பை: பெட்ரோல் ₹111.21 | டீசல் ₹97.83

  • புதுடெல்லி: பெட்ரோல் ₹102.12 | டீசல் ₹95.20

  • கொல்கத்தா: பெட்ரோல் ₹113.51 | டீசல் ₹99.82

  • பெங்களூரு: பெட்ரோல் ₹111.68 | டீசல் ₹99.56

  • ஹைதராபாத்: பெட்ரோல் ₹115.69 | டீசல் ₹103.82

தனியார் எரிபொருள் நிறுவனமான நயாராவைத் தொடர்ந்து, தற்போது ஜியோ பிபி பங்க்குகளிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : பெட்ரோல் விலை திடீர் உயர்வு: பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 உயர்த்தியது நயாரா எனர்ஜி!
petrol diesel price
logo
Kalki Online
kalkionline.com