வந்தாச்சு சூப்பர் நியூஸ்..! இனி ஜியோ பயனர்கள் Canva Pro வசதியை இலவசமாக பெறலாம்..!

ஜியோ பயனர்களுக்கு 12 மாத கான்வா புரோ இலவசம்! ஜியோவின் புதிய பம்பர் ஆஃபர்!
reliance jio users to get free canva
reliance jio users to get free canva
Updated on

ஜியோ தனது பயனர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள Canva Pro வசதியை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் போஸ்டர், வீடியோ, சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்டவற்றை பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் எடிட் செய்ய முடியும். இந்தச் சலுகையைப் பெறும் வகையில் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2GB டேட்டாவுடன் Canva Pro Lite வசதியும், ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டாவுடன் Canva Pro வசதியும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, உலகின் முன்னணி வடிவமைப்புத் தளமான கேன்வா (Canva) உடன் இணைந்து ஒரு புதிய பார்ட்னர்ஷிப் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு கூட்டாண்மையின் கீழ், தகுதிபெறும் ஜியோ பயனர்களுக்கு 12 மாதங்களுக்கான 'கான்வா புரோ' (Canva Pro) அல்லது 'கான்வா புரோ லைட்' (Canva Pro Lite) சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.ரூ.4,000 வரை மதிப்புள்ள இந்தச் சலுகை மூலம் இந்திய மாணவர்கள், சிறு தொழில் முனைவோர்கள், படைப்பாளிகள் (Creators) மற்றும் தொழில்முறை நிபுணர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • 12 மாத இலவச அனுமதி: தகுதிபெறும் ரீசார்ஜ் திட்டங்களைச் செய்யும் பயனர்கள் 12 மாதங்களுக்கு இந்தச் சலுகையை கூடுதல் கட்டணமின்றிப் பெறலாம்.

  • இந்திய மொழிகளில் ஆதரவு: இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் கான்வாவைப் பயன்படுத்த முடியும்.

  • சலுகையை உரிமை கோருவது எப்படி? ரீசார்ஜ் செய்த பிறகு, MyJio செயலி (App) மூலம் பயனர்கள் இந்த ஆஃபரை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

  • தொடக்க நாள்: இந்த ஆஃபர் செப்டம்பர் 16, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

எந்த ரீசார்ஜ் திட்டத்திற்கு என்ன சலுகை?

  1. ரூ. 399 ரீசார்ஜ் திட்டம்:

    இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு முழுமையான 'கான்வா புரோ' (Canva Pro) சந்தா 12 மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

  2. ரூ. 349 மற்றும் அதற்கு மேற்பட்ட 2GB/நாள் திட்டங்கள்:

    ரூ.349 திட்டம் மற்றும் தினமும் 2GB டேட்டா வழங்கும் அதற்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த திட்டங்களுக்கு 'கான்வா புரோ லைட்' (Canva Pro Lite) சந்தா வழங்கப்படும்.

கான்வா புரோ vs கான்வா புரோ லைட் - என்ன வித்தியாசம்?

  • கான்வா புரோ லைட் (Canva Pro Lite):

    இதில் பிரீமியம் டெம்ப்ளேட்கள், பின்னணி நீக்கம் (Background Remover), மேஜிக் எரேசர் (Magic Eraser), 3 பிராண்ட் கிட்கள் (Brand Kits) மற்றும் 50GB கிளவுட் சேமிப்பகம் (Cloud Storage) ஆகியவை அடங்கும்.

  • கான்வா புரோ (Canva Pro):

    'புரோ லைட்'டில் உள்ள அனைத்து வசதிகளுடன் சேர்த்து, 100GB கிளவுட் சேமிப்பகம், 5 பிராண்ட் கிட்கள், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Full AI Suite) கருவிகள், சமூக வலைத்தளப் பதிவுகளை திட்டமிடும் வசதி (Content Planner) மற்றும் AI சாட் மூலம் வடிவமைப்பு உருவாக்கும் வசதிகளும் வழங்கப்படும்.

reliance jio users to get free canva
reliance jio users to get free canvasource:telecom.talk

"இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள் மற்றும் படைப்பாளிகளின் கைகளில் AI சார்ந்த வடிவமைப்பு கருவிகளைக் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்" என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் கிரண் தாமஸ் தெரிவித்துள்ளார்.

கான்வா நிறுவனத்தின் இணை நிறுவனர் கிளிஃப் ஓப்ரெக்ட் பேசுகையில், "கான்வாவின் அதிவேக வளர்ச்சிச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று; ஜியோவுடனான இந்த இணைப்பு மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு எங்களது தளத்தைக் கொண்டு சேர்க்கும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
16 வயதிலேயே AI நிறுவனம்.. தந்தைக்கே ரூ 2 லட்சம் சம்பளம் வழங்கும் 'AI kid of India'!
reliance jio users to get free canva
logo
Kalki Online
kalkionline.com