காவல்துறையில் பணியிட மாற்றம்! சைலேந்திரபாபுவுக்கு காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபி கூடுதல் பொறுப்பு!

DGP Sylendra Babu
DGP Sylendra Babu
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபுவுக்கு காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக உள்ள வெங்கடராமன், மறு உத்தரவு வரும் வரை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாகப் பிரிவில் கூடுதல் டிஜிபியாக உள்ள சங்கர், சென்னையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படையில் கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக தற்போது பணியாற்றி வரும் கூடுதல் டிஜிபி ஜெயராம், சென்னை ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

police station
police station

தூத்துக்குடியில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள சந்தீஷ், காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு, கோவை(வடக்கு) மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பதவியில் இருந்து வரும், மதிவாணன் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பதவியை வகித்து வரும் அசோக்குமார் சென்னையில் சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடலோர காவல்படையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் எஸ்.செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ படையில் எஸ்.பியாக பணியாற்றி வரும் ஜி.ராமர், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையில் எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com