தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..! பூட்டானில் நர்ஸ் வேலை… 80,000 சம்பளம்!

Nurse Job vaccany
Nurse
Published on

நர்ஸ் பணிக்கு பூட்டானில் வேலை வாய்ப்பு குறித்த தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதப்படுகிறது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஓமானில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையுடன் இணைந்து, 100க்கும் மேற்பட்ட நர்ஸ்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

  • நர்சிங் பட்டப்படிப்பு (B.Sc. Nursing) அல்லது டிப்ளமோ (GNM) முடித்திருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் அவசியம்.

  • ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சலுகைகள்:

  • 80 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்.

  • இருப்பிடம் மற்றும் உணவு இலவசம்.

  • விமான டிக்கெட் மற்றும் விசா செலவுகள் நிறுவனத்தால் ஏற்கப்படும்.

  • மருத்துவ காப்பீடு மற்றும் ஆண்டு விடுமுறை வழங்கப்படும்.

வயது வரம்பு:

23 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

மொத்தம் 100 செவிலியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 முதல் 5 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.65,000

6 முதல் 10 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.73,000

10 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.86,000

 விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 18.08.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

1. முதலில், https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

2. அதன்பின், தங்களின் சுயவிவர படிவம் (CV), கல்வித்தகுதி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் மற்றும் பணி அனுபவ சான்றிதழ்களை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இன்றி, நேரடியாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் இந்த பணி நியமனம் நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், சேவை கட்டணமாக ரூ.35,400 செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
22 மாதங்களாக புற்றுநோயுடன் போராட்டம்! மீண்டு, மீண்டும் ஐஐஎம் படிக்க திரும்பிய சாதனை பெண்!
Nurse Job vaccany

கூடுதல் தகவல்களுக்கு 6379179200 மற்றும் 044-22502267 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், https://omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் விவரங்களை அறியலாம். விரும்புமுள்ளவர்கள் 18.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் செவிலியர் பணியில் சேர விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com