இன்று தான் கடைசி நாள் : DRDO நிறுவனத்தில் மாத உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்..!

job opportunities...
job opportunities...
கல்கி டெஸ்க்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

DRDO கீழ் உளவியல் ஆய்வு பாதுகாப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் மாதம் உதவித்தொகையுடன் (Stipend) 6 மாதம் காலம் பயிற்சி பெறலாம்.

DRDO இன்டர்ன்ஷிப் :

அமைப்பின் பெயர் : பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

இன்டர்ன்ஷிப் நிறுவனம் : உளவியல் ஆய்வு பாதுகாப்பு நிறுவனம்

காலிப்பணியிடங்கள் : 8

இடம் : டெல்லி

இணையதளம் : https://drdo.gov.in/

இன்டர்ன்ஷிப் விவரங்கள் :

உளவியல் மற்றும் கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டும் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். உளவியலில் 6 இடங்கள் மற்றும் பொறியியல் 2 இடங்கள் உள்ளன.

தகுதிகள்:

  • உளவியல் இடங்களுக்கு அப்பாடத்தில் இறுதி ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • கணினி அறிவ்யல் பொறியியல் பாடத்திற்கு இறுதி ஆண்டு பி.டெக்/ பிஇ பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

எவ்வளவு வழங்கப்படும்:

DRDO இன்டர்ன்ஷிப் வாய்ப்பிற்கு தேர்வாகும் மாணவர்கள் டெல்லியில் உள்ள DIPR-யில் 6 மாதங்கள் பயிற்சி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

முதல் 3 மாதங்களில் ரூ.15,000 மற்றும் அடுத்த 3 மாதங்களில் ரூ.15,000 என வழங்கப்படும். (தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும்).

எப்படி தேர்வு :

இன்டர்ன்ஷிப் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், பயிலும் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது இயக்குநர் மாணவர்களுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வி திறன், ஆய்வுகள், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், நேரடி தொலைப்பேசி/ வீடியோ கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மத்திய அரசு நிறுவன வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள மாணவர்கள் https://drdo.gov.in/ என்ற இணையதலத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.01.2026

மாணவர்கள் தேர்வு : 29.01.2026

பயிற்சி தொடக்கம் : 01.02.2026

இதையும் படியுங்கள்:
இந்திய ரயில்வேயின் முதல் ‘ரோபோ போலீஸ்’ - விசாகப்பட்டினத்தில் அறிமுகம்!
job opportunities...
logo
Kalki Online
kalkionline.com