
ரெயில்வேயில் பணி வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? அதுவும் தெற்கு ரெயில்வேயில் வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இது அதற்கு சரியான தருணம் ஆகும். அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: தெற்கு ரெயில்வே
பணி இடங்கள்: 67 (விளையாட்டு வீரர்கள் மட்டும்). லெவல் 1 பிரிவில் 46, லெவல் 2,3 பிரிவில் 16, லெவல் 4, 5 பிரிவில் 5 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன.
பதவி: ஜூனியர் கிளார்க், டைம் கீப்பர்.
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., 12-ம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
விளையாட்டு தகுதி: தடகளம், பளு தூக்குதல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், டென்னிஸ், ஆக்கி, கோல்ப் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள். உலகக்கோப்பை, உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, தெற்கு ஆசியா கூட்டமைப்பு போட்டி, ரெயில்வே சார்பில் பங்கேற்ற போட்டிகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை அளவிலான போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-1-2026 அன்றைய தேதிபடி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-2001 முதல் 1-1-2008-க்கு இடைபட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு ஏதும் கிடையாது.
தேர்வு முறை: விளையாட்டு தொடர்பான மதிப்பீட்டு பரிசோதனை, போட்டிகளில் படைத்த சாதனை, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 (ரூ. 400 ரீபன்ட்). பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 (முழுவதும் ரீபன்ட்).
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2025
இணையதள முகவரி: https://rrcmas.in/