உடனே அப்ளை பண்ணுங்க..! குழந்தைகள் உதவி மையத்தில் பணியாற்ற வாய்ப்பு..!

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Published on

தமிழ்நாடு அரசின் பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மதுரையில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையங்களுக்கு (1098) மேற்பார்வையாளர்கள், வழக்கு பணியாளர்கள் ஆகிய 12 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன. மேற்பார்வையாளர் பணிக்கான 6 இடங்களும் வழக்கு பணியாளர் பணிக்கான 6 இடங்களுமாக மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் பணிபுரிவதற்கு ஆனது ஆகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 42 வயதைக் கடந்தவராக இருக்கக்கூடாது. அவசர உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு வயது வரம்பு 52 ஆகும்.

மேற்பார்வையாளர் (Supervisor) பதவிக்கு சமூகப் பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வகுப்பு சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினியில் அறிவு தேவை. அவசர கால உதவி எண்களில் பணிபுரிந்தவர்கள் முன்னுரிமை பெறமுடியும்.

வழக்குப் பணியாளர் ( Case Worker) பதவிக்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சியுடன் பொது மக்களுடன் கலந்து பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.இந்த இரண்டு பதவிகளுக்கும் அவரச உதவி எண்களில் பணிபுரிந்தவர்கள் முன்னுரிமை பெறலாம்.

வயதுவரம்பு : இப்பணி இடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத தொகுப்பூதியமாக குழந்தைகள் உதவி மையத்தின் மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.21,000மும் வழக்கு பணியாளர்மாதம் ரூ.18,000மும்பெறுவார்கள். இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள். அவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகிய விவரங்களுடன் நவம்பர் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற மதுரை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதை முழுவதுமாக நிரப்பி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் சான்றிதழ் நகல்களுடன் தபால் வழியாகவோ அல்லது நேரடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

3வது தளம், கூட்டுதல் கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

மதுரை -625 020.

இதையும் படியுங்கள்:
இவை கொசுக்களுக்கு மட்டுமல்ல நமக்கும் எதிரி தான்!
வேலை வாய்ப்பு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com