
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
இணை துணைத் தலைவர் 3
ப்ரோகிராம் மேனேஜர் 21
சீனியர் அசோசியேட் 8
ஜோனல் கணக்கு மேனேஜர் 5
திட்ட அசோசியேட் 35
ஜூனியர் அசோசியேட் 1
இளம் வல்லுநர் 16
ப்ரோகிராம் நிர்வாகி 38
மொத்தம் 126
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு 31.07.2025 தேதியின்படி, இணை துணைத் தலைவர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.சீனியர் அசோசியேட், ஜோனல் கணக்கு மேனேஜர், திட்ட அசோசியேட் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.ஜூனியர் அசோசியேட், இளம் வல்லுநர் பதவிக்கு அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
இணை துணைத் தலைவர் பதவிக்கு பி.இ/ பி.டெக், எம்பிஏ, காட்சித் தொடர்பு / இதழியல் / ஊடகம் / சந்தைப்படுத்தல் அல்லது இதற்கு தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 7 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை.
ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு, எம்பிஏ, மீடியா சார்ந்த படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை.
ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு பொறியியல் படிப்புடன் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.
திட்ட அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது எம்பிஏ அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு ஆகியவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 4 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.
ஜூனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பபை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
இளம் வல்லுநர் பதவிக்கு பொறியியல், கணினி அறிவியல் அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 ஆண்டு மேலான அனுபவம் தேவை.
ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு எம்பிஏ அல்லது தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இணை துணைத் தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும்.
ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
சீனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
திட்ட அசோசியேட் பதவிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜூனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இளம் வல்லுநர் பதவிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் பணிபுரிய விரும்புகிறவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் புகைப்படம், கையொப்பம், அடையாள அட்டை, வீட்டு முகவரி, கவ்லித்தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாத கால அளவில் ஒப்பந்த முறை பணியமர்த்தப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முகவரி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
மெட்ரோ எஸ் கட்டடம், 8வது தளம்,
எண்.327, அண்ணாசாலை,
நந்தனம், சென்னை - 600035
தமிழ்நாடு.
இமெயில் ஐடி : recruitment@naanmudhalvan.in
தொலைபேசி எண் : 044 - 2250 0107.