போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடன்… அடுத்து இவருக்கும் அவருக்கும்தான் போட்டியே!

Joe Biden
Joe Biden
Published on

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடப்போவதாக சொன்ன ஜோ பைடன், தற்போது திடீரென்று போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், பிரச்சாரமும், தேர்தல் பணிகளும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சங்கடங்கள் வருகின்றன.

அதேபோல் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். அதிபர் தேர்தலில் பைடன் செயல்பாடுகள் குறித்து சொந்தக்கட்சியினரே விமர்சனம் செய்கின்றனர். இப்படியான சூழலில்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதற்கிடையே சனிக்கிழமை வரை திடமாக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த இவர், திடீரென்று போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

ஜோ பைடனுக்கு ஏற்கனவே சொந்த கட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆகையால், அவரை இம்முறை போட்டியிட விடக்கூடாது என்று கட்சிக்காரர்களே எதிர்த்தனர். ஆனாலும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று திடமாக இருந்து வந்தார். தற்போது அவரது குடும்பத்தினரும் போட்டியிலிருந்து விலக கூறியதாக சொல்லப்படுகிறது. ஆகையால்தான் இவர் திடீரென்று போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

இதுபோக முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன், அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கூறினர்.

இதையும் படியுங்கள்:
ஹைதியில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு… 40 பேர் பலி!
Joe Biden

அடுத்தடுத்து இவ்வாறு நடந்து வந்த நிலையில், ஜோ பைடன் கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இதனால்தான் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரில் இருந்து திடீரென விலகியிருப்பதால் மீண்டும் ஜனநாயக கட்சியினர் கூடி புதிய வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பெரும்பாலும் கமலா ஹாரிஸ்க்கே இதில் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

இதனால், இப்போது டொனால்ட் ட்ரம்பிற்கும் கமலா ஹாரிஸ்க்கும்தான் போட்டியே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com