வெறும் 1 பைசா சேவை கட்டணத்தில் தாய்மாமன் திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்றியது ஜாய் ஆலுக்காஸ்!

1 பைசா கோரி ₹755 கோடி டெண்டரை தட்டிய தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்!: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் ஆச்சரிய திருப்பம்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர்
Updated on

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ரூபாய் 755 கோடி மதிப்பிலான தங்கம் கொள்முதல் டெண்டரில் பிரபல நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் வியக்கத்தக்க வகையில் வெறும் ஒரு பைசா கோரி எல் ஒன்( L1 )நிறுவனமாக தேர்வு தங்கம் விலையை தவிர்த்து செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் ஒரு பைசாவை மட்டுமே கோரியுள்ள இந்நிறுவனத்திற்கு விரைவில் அதிகாரப்பூர்வ கொள்முதல் ஆணை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கும் மிகப்பெரிய தங்க நகை மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் புகழ்பெற்ற ஒன்றாக கேரளாவின் ஜாய் ஆலுக்காஸ் விளங்குகிறது.

2024ஆம் ஆண்டு தவெக கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தனக்கு ஆதரவு தந்த பெண்கள் ,இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒன்று தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். அரசு மருத்துவ மனைகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இத்திட்டத்திற்கான ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரித்து வழங்கும் ரூ.755 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரபல நகைக்கடை நிறுவனங்கள் இடையில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மோதிரம் செய்வதற்கான கூலி மற்றும் இதர கட்டணங்களை வெறும் 1 பைசாவாக நிர்ணயித்து இந்நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்து இந்நிறுவனம் ஆச்சரியம் தந்துள்ளது.

முந்தைய ஆட்சியின் திட்டங்களாக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் , அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி நலத்திட்டங்கள், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், குழந்தைகளுக்கான சுகாதார திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில் கூடுதலாக அரசு அறிவித்துள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீராக தங்கமோதிரம் திட்டம் தங்க விலை எகிறும் இந்த வேளையில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.

TN govt thai maman thanga mothiram
Vijay and gold ring

குறிப்பாக கட்சி துவங்கி 2 வருடங்களில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜயின் தேர்தல் வெற்றிக்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் இதனை கருத்தில் கொண்டே அவரது ‘வெற்றி’ திட்டங்களும் பெண்கள் மற்றும் தாய்மார்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் ‘வெற்றி’தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தை, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்தத் திட்டத்திற்கான டெண்டரை வெறும் ஒரு பைசா என நிர்ணயித்து ஜாய் ஆலுக்காஸ் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது தற்போது பேசும் பொருளாக உள்ளது. குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்திற்கு இதற்கான அதிகாரப்பூர்வ பணி ஆணை விரைவில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஊட்டச்சத்து சார்ந்த திட்டங்கள் மூலம் அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் முன் இருந்த ஆட்சிகளில் வழங்கப்பட்ட வழங்கப்பட்ட 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' திட்டம் தற்போது மாற்றப்பட்டு, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் (Baby Care Kits) வழங்கப்படுகின்றன.

அதன் கீழ் குழந்தை நல திட்டங்களாக குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்குக் கீழ்) பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச் சத்து, வைட்டமின் டி3 மற்றும் பன்முக வைட்டமின் சொட்டுகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. PICME மற்றும் 'தாய்மை' செயலி மூலம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தடுப்பூசிகள் கண்காணிக்கப்படுவதும் சிறப்பு.

இந்த நலத்திட்டங்களுடன் தாய் மாமன் திட்டமாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் நடைமுறைக்கு வரவுள்ளது தாய்மார்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்திலும் அதிக குழந்தைகள் பெற ஊக்கத்தொகையா? அமைச்சர் அறிவிப்பு..!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர்
logo
Kalki Online
kalkionline.com