ஷாக்.. கிடுகிடு உயர்வு.. 2-வது நாளாக உயர்ந்தது தங்கம்.!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
Updated on

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தத் தேவையே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகம் என்பதால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தொடர் விலை உயர்வை சந்தித்தது.

தங்கத்தின் விலையும் ஏற்றம் காணும் நிலையில், பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் இல்லத்தரசிகள் பலரும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே எப்போது சரியும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சில தினங்களில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது விலை உயர்வா அல்லது விலை சரிவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நேற்று (ஜூலை 20) தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்தது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 21) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 21-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,440-க்கும், 1 கிராம் ரூ.9,180-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 21-ல் 1 கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையோடு கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரே ஆண்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உயர்வை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத இந்த விலை உயர்வால் தான், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிரதமர் வேட்பாளராகிறாரா விஜய்? ஆர்.பி.உதயகுமார் கிளப்பிய புதிய சர்ச்சை!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 20: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 19: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

ஜூலை 18: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

ஜூலை 17: 1 கிராம் - ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800

ஜூலை 16: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 20: 1 கிராம் - ரூ.235

ஜூலை 19: 1 கிராம் - ரூ.235

ஜூலை 18: 1 கிராம் - ரூ.235

ஜூலை 17: 1 கிராம் - ரூ.235

ஜூலை 16: 1 கிராம் - ரூ.240

வருங்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்ற கணிப்பே முதலீட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை இனி உயர்வது சற்று கடினம் தான். வெள்ளி விலையைப் பொறுத்தவரை உயர்வோ அல்லது சரிவோ அது பெரிய அளவில் இருக்கும்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் வெள்ளி விலை அதிகபட்சமாக ஒரு கிராம் ரூ.430 வரை உயர்ந்ததை யாரும் மறக்க வேண்டாம். ஆனால் இப்போது இதன் விலை பாதியாக சரிந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
Gold & Silver
இதையும் படியுங்கள்:
செஸ் மைந்தர்களுக்கு சர்ப்ரைஸ்: எல்லா உதவிகளையும் அரசு வழங்கும்: முதல்வர் விஜய்யின் அதிரடி வாக்குறுதி
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com