

வாரத் தொடக்கத்தில் இருந்து உயரந்து வந்த தங்கம், நேற்று ஒரே நாளில் ரூ.2,160 குறைந்தது. திங்கள் முதல் வியாழன் வரையிலான கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்தது. ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து நேற்று (ஜூலை 23) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,160 குறைந்து, ரூ.1,05,840-க்கு விற்பனையானது.
அமெரிக்க சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிக விலையேற்றத்தை சந்திக்கும் என்பதை உணர்ந்ததால் தான், இந்தியன் ரிசர்வ் வங்கி கூட டன் கணக்கிலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், ஆடம்பர வாழ்க்கையைக் காட்டிலும் தங்க முதலீடு நல்ல பலனைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளனர். உங்களால் தங்கத்தில் மொத்தமாக முதலீடு செய்ய முடியவில்லை என்றாலும், சிறுக சிறுக முதலீடு செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
தற்போது ஆடி மாதம் என்பதால் பல நகைக் கடைகளில் சேதாரம் மற்றும் செய்கூலி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்வால், ஆடைகளைப் போல் தங்கத்திற்கும் ஆடி ஆஃபர் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது அவ்வளவு சுலபம் இல்லை. ஒருவேளை தங்கத்திற்கும் ஆடி ஆஃபரில் தள்ளுபடி வழங்கப்பட்டால், அது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 25) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 24: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 23: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000
ஜூலை 22: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,07,440
ஜூலை 21: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஜூலை 20: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஜூலை 24: 1 கிராம் - ரூ.240
ஜூலை 23: 1 கிராம் - ரூ.245
ஜூலை 22: 1 கிராம் - ரூ.245
ஜூலை 21: 1 கிராம் - ரூ.240
ஜூலை 20: 1 கிராம் - ரூ.235
தங்கத்தில் எப்போது முதலீடு செய்வதாலும் அது நல்ல முதலீட்டு யுக்தி என நகைக்கடை விற்பனையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். வெள்ளியின் விலையானது திடீரென ஏறும்; ஆனால் ஏறிய வேகத்திலேயே திடீரென இறங்கி விடும். இதனால் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற சூழல் தான் நிலவும். இருப்பினும் வெள்ளி முதலீட்டைப் பொறுத்தவரை விலை குறையும் போது முதலீடு செய்து, விலை உயரும் போது விற்று விடுவது தான் புத்திசாலித்தனம். மேலும் விலை மேலும் அதிகரிக்கும் என காத்திருப்பது, வெள்ளி முதலீட்டிற்கு சரி வராது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.