

தங்கம் மற்றும் வெள்ளி விலையின் ஏற்ற இறக்கம் தற்போது சீசா விளையாட்டு போலவே இருக்கிறது. ஒருநாள் விலை ஏறினால், மறுநாளே குறைந்து விடுகிறது. இல்லையெனில் சிறுக சிறுக விலை உயர்ந்து, மொத்தமாக சரிந்து விடுகிறது.
இந்த விலை மாற்றம் முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிப்பதாகவே இருக்கிறது. ஆனால் விலையேற்றம் பெரிய அளவில் இல்லாமல் இருப்பது, இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலை மேலும் குறையுமா? மீண்டும் பழையபடி 5 இலக்க எண்களுக்குள் தங்கத்தின் விலை அடங்குமா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் இதற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர வேண்டும். டாலரின் மதிப்பு சரிந்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து, விலை உயர வாய்ப்புள்ளது.
நேற்று (ஜூலை 29) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1,05,240-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,720 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 30) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.600 உயர்ந்து, ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.
ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்தால், அது நேரடியாக பொருளாதார சந்தையை பாதிக்கும். இதனால் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
சில சமயங்களில் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பைத் தவிடு பொடியாக்கும் விதமாக தங்கத்தின் விலை மாற்றம் இருக்கிறது. அவ்வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்ற கணிப்புக்கு மாறாக தற்போது, விலை சரிந்து வருகிறது
ஒரு மாதத்திற்கு முன்பு:
* கடந்த மாதம் 2026 ஜூன் 30-ல் தங்கத்தின் விலை: 1 கிராம் - ரூ.13,030 1 சவரன் ரூ.1,04,240
* கடந்த மாதம் 2026 ஜூன் 30-ல் வெள்ளியின் விலை: 1 கிராம் - ரூ.240
ஒரு ஆண்டிற்கு முன்பு:
* கடந்த ஆண்டு 2025 ஜூலை 30-ல் தங்கத்தின் விலை: 1 கிராம் - ரூ.9,210 1 சவரன் ரூ.73,680
கடந்த ஆண்டு 2025 ஜூலை 30-ல் வெள்ளியின் விலை: 1 கிராம் - ரூ.127
மேற்கண்ட விவரங்களில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்த விலை நிலவரத்திற்கும், தற்போதைய விலைக்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டிற்கு முந்தைய விலை நிலவரங்களை ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், மேலும் உயரும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.