​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!

Robert Kiyosaki Advise
ETF Investment
Updated on

தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் இன்றைய நவீன யுகத்தில், முதலீடு செய்வது கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. வருங்காலத் தேவைக்கு இன்றைய முதலீடு தான் அஸ்திவாரம். அப்படி இருக்கையில் முதலீட்டில் நாம் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் எவ்வகையான முதலீட்டை தேரந்தெடுக்க வேண்டும் என்பதில் தான் இங்கு பலருக்கும் குழப்பம் உண்டாகிறது.

பொருளாதார நிபுணர்கள் பலர் முதலீடு குறித்து பல்வேறு யுக்திகளை வழங்கினாலும், புகழ்பெற்ற முதலீட்டாளர் ராபார்ட் கியோசாகி என்பவரின் வார்த்தைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ETF முதலீடு குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர், தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் நிதி ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட கியோசாகி காகித வடிவிலான ETF முதலீடுகளை அறவே தவிர்ப்பவர். ஏனெனில் நம் முதலீட்டின் மீது நமக்கே கட்டுப்பாடு இல்லையெனில், அது எப்படி சிறந்த முதலீடாக இருக்கும்

டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், பெரும்பாலான முதலீட்டாளர்கள் ETF வழியில் முதலீடு செய்து வருகினறனர். ஆனால் இது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்பதால், எப்போது வேண்டுமானாலும் சரிய வாய்ப்புள்ளது.

அதே சமயம் ETF முதலீடுகளின் மீது நமக்கு நேரடித் தொடர்பு இருக்காது. இந்நிலையில் தான் ETF முதலீடு குறித்த எச்சரிக்கை பதிவு ஒன்றை ராபர்ட் கியோசாகி வெளியிட்டுள்ளார்.

ராபர்ட் கியோசாகி வெளியிட்ட பதிவில், “பல்வகையான முதலீடு என்ற பெயரில் பலரும் தங்கம், வெள்ளி, பிட்காயின், பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் இவை எல்லாமே ஒரே சொத்து வகையில் அடங்கி விடும். அதாவது இவை எல்லாமே காகித வடிவிலான ETF முதலீடுகள்.

நிலங்களை REIT முறையிலும், தங்கம், வெள்ளி, பத்திரங்கள் மற்றும் பங்குகளை ETF முறையிலும் முதலீடு செய்கின்றனர். இப்படி முதலீடு செய்வது உண்மையான முதலீடே இல்லை. இவற்றை போலி சொத்துகளின் நிழல் என்றே அழைக்க வேண்டும். எனக்கு உண்மையான சொத்துகளின் மீது முதலீடு செய்வதில் தான் விருப்பம்.

என்னுடைய சொத்துகள் எனது காவலில் தான் இருக்க வேண்டும்; ETF காவலில் அல்ல. என் சொத்துகளை நான் தொடுகிறேன்; உணர்கிறேன்; கட்டுப்படுத்துகிறேன். இம்மாதிரியான முதலீட்டுக்கு சற்று கூடுதல் நேரமாகும். அதோடு செலவும் அதிகம். இருப்பினும் தனியார் மூலதன முதலீட்டாளராக இருப்பதை நான் நேசிக்கிறேன்.

நான் மேலும் படிக்க வேண்டியுள்ளது. அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையான சொத்துகளில் முதலீடு செய்வது தான் எனது தேர்வு. முதலீட்டில் உங்கள் தேர்வு என்ன?” என கியோசாகி பதிவிட்டுள்ளார்.

Robert Kiyosaki
Robert Kiyosaki
இதையும் படியுங்கள்:
ரூ.2,400 சரிவு.! தங்கம் வாங்க இதான் ‘கோல்டன் சான்ஸ்’.. மிஸ் பண்ணிடாதீங்க!
Robert Kiyosaki Advise

ராபர்ட் கியோசாகி கூற்றுப்படி நிலம், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் போது, அதனை நேரடியாக வாங்குவதே நல்லது. நிலத்தில் முதலீடு செய்தால் அந்த நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய நினைத்தால், ETF முறைப்படி அல்லாமல் நேடியாக வாங்குவதே சிறந்தது.

நாம் ஒரு முதலீட்டை நேரடியாக தொடங்கும் போது அது சந்தை அபாயங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ETF தான் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், ETF-ல் நம்மிடம் இருக்கும் 100 ரூபாயைக் கூட தங்கத்தில் முதலீடு செய்ய முடியும்.

ஆனால் நேரடி முதலீட்டில் இது சாத்தியமில்லை. அதனால் தான் நேரடியான உண்மை முதலீட்டிற்கு அதிக செலவாகும் என ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

ETF பற்றி எதுவும் தெரியாதவர்கள், அதில் முதலீடு செய்வதைத் தவிர்த்து பாதுகாப்பான முதலீடுகளான அஞ்சல் அலுவலகம், எல்ஐசி மற்றும் வங்கி முதலீடுகளில் கவனம் செலுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! ரூ.12 வரை குறையும் பெட்ரோல் விலை! மத்திய அரசின் அதிரடி சலுகை.!
Robert Kiyosaki Advise
logo
Kalki Online
kalkionline.com