#JUST IN: காலையிலேயே ஷாக்.. மளமளவென உயர்ந்த தங்கம் விலை.!

Gold
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஜூன் 18-ல் கையெழுத்தான நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் நேற்று தங்கத்தின் விலை ரூ.3,040 வரை குறைந்தது. இனி ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நேற்று (ஜூன் 19) ஒரு சவரன் தங்கம் ரூ.3,040 குறைந்த நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 20) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,08,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 20-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது

அதேபோல் 2025 ஜூன் 20 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

Gold
Goldimage credit : ETV Bharat
இதையும் படியுங்கள்:
#BIG NEWS : டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Gold

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 19: 1 கிராம் - ரூ.13,570 1 சவரன் ரூ.1,08,560

ஜூன் 18: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

ஜூன் 17: 1 கிராம் - ரூ.14,030 1 சவரன் ரூ.1,12,240

ஜூன் 16: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

ஜூன் 15: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 19: 1 கிராம் - ரூ.255

ஜூன் 18: 1 கிராம் - ரூ.270

ஜூன் 17: 1 கிராம் - ரூ.275

ஜூன் 16: 1 கிராம் - ரூ.275

ஜூன் 15: 1 கிராம் - ரூ.280

பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர். குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களே இதை உடனே பண்ணிடுங்க.. இல்லாட்டி ரேஷன் பொருள் கிடைக்காது ..!!
Gold
logo
Kalki Online
kalkionline.com