#JUST IN: தமிழ்நாட்டில் 7,600 பேர் வேட்புமனுத் தாக்கல்.!

Nomination for election 2026
Nomination for election 2026
Updated on

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தம் எத்தனை பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி மொத்தம் 7,600 பேர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 108 பேரும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 11 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் வேட்பமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை..!
Nomination for election 2026

ஆண் வேட்பாளர்கள் - 6,095 பேர்

பெண் வேட்பாளர்கள் - 1,356 பேர்

மூன்றாம் பாலினத்தவர் - 3 பேர்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 7,600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்கி, ஏப்ரல் 6-ல் நிறைவடைந்தது. ​கடைசி நாளான நேற்று, 2,500-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்ரல் 7, 2026) நடைபெறுகிறது. ​வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை கிடையாது.! ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்.!
Nomination for election 2026
logo
Kalki Online
kalkionline.com