#JUST IN: டெல்லி தலைவரை கொளத்தூரில் இறக்கிய ஸ்டாலின்.! திமுகவின் மெகா பிளான்.!

M k stalin
M k stalin
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிய உள்ள நிலையில், இன்று கொளத்தூரில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமை தொகையை சேமித்தால் லட்சாதிபதி ஆகலாம்? எப்படி தெரியுமா.?
M k stalin
Aam Aadhmi
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்திருக்கிறேன். தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தமிழ்நாடு மக்களுக்கு அளித்துள்ளார்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வெளி மாநில தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்வது, அக்கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
#JUST IN: TVK பற்றி கவலையே இல்லை.. NDA vs DMK தான்... நயினார் நாகேந்திரன்.!
M k stalin

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com