#JUST IN: விஜய்க்கு க்ரீன் சிக்னல்.! கடலூர் பிரச்சார விவரம் வெளியானது.!

TVK Vijay
TVK Vijay
Updated on

தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், நாளை கடலூர் மாவட்டத்தின் நான்கு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்றைய பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார் விஜய். புதுச்சேரி வழியாக கடலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழலில், அங்கு நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால், கடலூர் பிரச்சாரத்தை நேற்று ரத்து செய்தது தவெக. இ

இந்நிலையில் மீண்டும் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கிடைத்திருப்பதால், நாளை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூரில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பொதுமக்களே உஷார்.!இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!
TVK Vijay

நாளை கடலூரில் நடைபெற இருக்கும் பிரச்சாரத்தில் 10,000 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்; விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து வரக்கூடாது; பிரச்சார வாகனத்தில் யாரும் ஏறக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இது தவிர பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை தவெக-வினர் முன்னேற்பாடாக செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய 4 இடங்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார்

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com