#JUST IN: தங்கம் விலை உயர்ந்ததா சரிந்ததா..?? இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது.

நேற்று முன்தினம் (மே 6) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,840 உயர்ந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் மாலையிலும் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்தது.

வெள்ளி விலையும் நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை என இரண்டு முறை தலா ரூ.5 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,200-க்கும் விற்பனையானது

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 8) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம், வெள்ளி அல்ல… செல்வ வளத்தை உருவாக்கும் ரகசியம் இதுதான்!
Gold Price

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,640 உயர்ந்த சூழலில், இன்று மாற்றமில்லாமல் தொடர்வது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் மட்டுமல்ல… டன் கணக்கில் வெள்ளியை வாங்கும் இந்தியா! காரணம் இதுதான்.!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com