#JUST IN: அவசர அவசரமாக கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.!

TVK Vijay's nomination
TVK Vijay
Published on

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக பெரம்பூர் தொகுதியில் கூடதலாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம்.! வேட்புமனுவில் சுந்தர்.சி தகவல்.!
TVK Vijay's nomination

பெரம்பூர் தொகுதியில் தன் மீது எவ்வித குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை என வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் தன் மீது இரண்டு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் விஜய்.

ஒரு தொகுதியில் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தெரிவித்து விட்டு, மற்றொரு தொகுதியில் அது குறித்த விவரங்களை தெரிவிக்காமல் விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மதுரை மாநாட்டில் விஜய் மீது பதிவான குற்ற வழக்கு மற்றும் கொளத்தூர் ரோடு ஷோவில் பதிவான குற்ற வழக்கு ஆகிய இரண்டையும் குறிப்பிடும் விதமாக, இன்று தனது முகவர் மூலமாக விஜய் பெரம்பூர் தொகுதியில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் விஜய்.

குற்ற வழக்குகள் குறித்து பெரம்பூர் தொகுதியில் விஜய் குறிப்பிடாத நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில் குற்ற வழக்குகளை தெரிவிக்கும் விதமாக அவசர அவசரமாக கூடுதல் பிரமாணப் பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 5 கிலோ சிலிண்டருக்கு இனி முகவரி சான்று தேவையில்லை.! மத்திய அரசு உத்தரவு.!
TVK Vijay's nomination

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com