#JUST IN: இன்று சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி - அடுத்தது பிரஸ் மீட் தான்!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே மீதமிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று திருப்பூரில் பரப்புரையை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பரப்புரையை மேற்கொள்ள விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று (ஏப்ரல் 15) மாலை 4 மணிக்கு ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் தொகுதிகளில் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

பரப்புரையின் போது விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கர்ப்பிணிகள், சிறுவர்கள் மற்றும் மூத்தக்குடி மக்கள் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என தாவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
TVK Vijay

தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜய், எப்போது பத்திரிகையாளர்களை சந்திக்க போகிறார் என்ற கேள்விக்கு தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவையில் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் கைகாட்டிய அத்தனை வேட்பாளர்களும் வெற்றி வாகை சூடுவார்கள். விஜய் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார் எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமெரிக்கா - ஈரான் போர்.! மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் டிரம்ப்..?
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com