ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு  144 தடை உத்தரவு!

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு  144 தடை உத்தரவு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

-இதுகுறித்து தன் உத்தரவில் அவர் தெரிவித்ததாவது;

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (செப்டம்பர் 11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையடுத்து அக்டோபர்  30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா பசும்பொன் ஊரில் நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது.

மேலும் இம்மாதம் 15-ம் தேதி வரை மற்றும் அக்டோபர் மாதம் 25 முதல் 31-ம் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார், சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் அஞ்சலி செலுத்த வரவேண்டும்.

-இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com