ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!
Updated on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம்  தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

– இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டதாவது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம் தேதி டெல்லி வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தார்.அன்று சுதந்திர தின அமிர்த விழா கொண்டாட்டத்திற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்துக்கு அழைப்பு வந்ததை அடுத்து அவர் டெல்லியில் சென்றார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பேசினார் .இந்த நிலையில் வருகிற 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது.அந்த விழாவிலும் பங்கேற்க ரஜினிக்கு பிரதமர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மீண்டும் டெல்லிக்கு வரவிருக்கிறார்.

– இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com