தங்கம் விலை அதிரடி உயர்வு: 1 சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது! 

தங்கம் விலை அதிரடி உயர்வு: 1 சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4890 –க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுகுறித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள்  சங்கத்தினர் தெரிவித்ததாவது; 

தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது சகஜம்.அந்த வகையில்,இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4.890 –க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டது. 

logo
Kalki Online
kalkionline.com