முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டதையடுத்து வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

_ இது குறித்து அந்த மருத்துவமனை செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக  இன்று காலையில் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

– இவ்வாறு அந்த மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, தனக்கு உடற்சோர்வு காரணமாக மருத்துவப் பரிசோதனை செய்ததில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக முதல்வர மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com