இன்று காமராஜர் பிறந்தநாள்; முதல்வர் ட்வீட்!

இன்று காமராஜர் பிறந்தநாள்; முதல்வர் ட்வீட்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது;

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை 'கல்வி வளர்ச்சி நாள்' என கலைஞர் அறிவித்தது பொருத்தமானது. தமிழர்கள் கல்வி பெற்றிட காமராஜர் முன்னெடுத்த திட்டங்கள் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக் கூறும்!

அவர் போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!

–இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com