ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம்; 20-ம் தேதி முதல் விற்பனை! 

ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம்; 20-ம் தேதி முதல் விற்பனை! 

ஆவினில் விரைவில் புதிதாக 10 பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்தார். 

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: 

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிதாக பலாப்பழ ஐஸ்கிரீம் உட்பட 10 புதிய பொருட்கள் வரும் 20-ம் தேதி முதல் ஆவின் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் ஆவின் பால் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இது வரை 150 உபபொருட்கள் தமிழ்நாட்டில் பல்வேறு நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 10 புதிய பால் உபபொருட்கள் ஆவின் அறிமுகப்படுத்த உள்ளது. அவற்றில் நுகர்வோரால் விரும்பத்தக்க வகையில் கோல்ட் காபி, பலாப்பழம் ஐஸ்கிரீம், யோகர்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது. 

இந்த 10 புதிய பால் உபபொருட்களும் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன.

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நலன் கருதி இந்த புதிய அறிமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் வருகிற 20-ம் தேதி அறிமுகப் படுத்தப் பட்டு பின்னர் அனைத்து ஆவின் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும். 

இவ்வாறு அமைச்சர் நாசர் தெரிவித்தார் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com