தங்கம் விலை கிடு கிடு உயர்வு!

தங்கம் விலை கிடு கிடு உயர்வு!

Published on

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன்20) உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 160 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக சவரண் ரூ.38,120 க்குள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சவரண் நேற்று ரூ.37ஆயிரமாகக் குறைந்திருந்த நிலையில் மீண்டும் இன்று ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை கிராம் ரூ.66.00க்கும், ஒரு கிலோ ரூ.66,000க்கு விற்பனையாகிறது. கடந்த 18ம் தேதி முதல் வெள்ளி கிலோ ரூ.66,300 வரை தொடர்ந்து 4 நாட்கள் இருந்தது. ஆனால், நேற்று மாலை வர்த்தகம் முடிவில் 300 ரூபாய் குறைந்து ரூ.66 ஆயிரமாக இருந்தது, அதே நிலை இன்று காலையும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com