தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்  இன்று தனது 69-ம் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து:

என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் விரைவில் உடல் நலம் பெற்று, துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், குறிப்பிட்டதாவது;

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்குத் தமிழ்நாடு பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது;

வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

-இவ்வாறு தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com