252 தோல்விகள்... ரூ.1 கோடி டெபாசிட் காலி! தேர்தல் ஆசையில் மீண்டும் போட்டியிடும் தேர்தல் மன்னன்..!!

பத்மராஜன், சட்டசபை தேர்தலில் சொந்த தொகுதியான மேட்டூரில் தனது தேர்தல் வரலாற்றில் 253-வது முறையாக வருகிற 30-ம்தேதி வேட்புமனு தாக்க செய்ய உள்ளார்.
பத்மராஜன்...
பத்மராஜன்...
Published on

தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-வது முறையாக வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் திருவிழா என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வேட்பாளர்கள்தான். அதிலும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தளவுக்கு பிரபலம் அடைந்தாலும் அதிகபட்சம் 10 முறைக்கு மேல் போட்டியிடுவதே பெரிய விஷயமாகும். ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், 1957 முதல் 2016 வரை தொடர்ந்து 13 முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஒருமுறை கூட தோல்வியடையாமல் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சுயேச்சை வேட்பாளர் 67 வயதான கே.பத்மராஜன் இதுவரை 252 முறை வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிட்டு அனைத்து முறையும் தோல்வி அடைந்து தேர்தல் மன்னன் என்ற கின்னல் சாதனையை படைத்துள்ளார் என்றால் சற்று பிரமிப்பாக தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
233 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்ற தேர்தல் மன்னன்... வாக்களித்த 9 பேருக்கு நன்றி தெரிவித்தார்!
பத்மராஜன்...

இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர். இவர் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, டெல்லி மேல் சபை, எம்பி, எல்எல்ஏ மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புக்கான தேர்தல் வரை களம் கண்டுள்ளார். இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மேல்சபை எம்பி, தேர்தலில் இவரது வேட்புமனுக்கள் உரிய பரிந்துரையாளர்கள் இன்றி தள்ளுபடி ஆகிவிடும் என்றாலும், எம்எல்ஏ தேர்தல் உள்பட தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் களம் கண்டுவிடுவார். இவர் குறைந்த ஓட்டுகள் பெற்று, தேர்தலில் அதிகமுறை தோல்வியை தழுவிய வேட்பாளர் என்ற சாதனையை படைத்து ‘லிம்கா’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

நான் வெற்றியை எதிர்பார்ப்பதில்லை. தோல்வியையே நான் வெற்றியாக கொண்டாடியதால் தான் இன்றைக்கு தேர்தல் மன்னன் என்று மக்களால் அழைக்கப்படுவதுடன், அதிக தோல்வியை தழுவியவர் என்பதற்காக உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து விட்டேன் என்று பத்மராஜன் பெருமையுடன் கூறுகிறார்.

தொடர்ந்து தோல்வியடைந்தாலும் தனது இறுதி மூச்சுவரை தேர்தலில் போட்டியிடுவேன், என்னை பொறுத்தவரை, தேர்தலில் பங்கேற்பதே உண்மையான வெற்றி என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். ஆனால், ஒருவேளை தான் வெற்றி பெற்றுவிட்டால், அது தனக்கே பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்றும் எனக்கு மாரடைப்பே வந்துவிடும் என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

இவர் தேர்தல் களத்தில் இறங்கியபோது மக்கள் இவரைப் பார்த்துச் சிரித்தனர்; ஆனால், ஒரு சாதாரண மனிதனும் தேர்தலில் பங்கேற்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

ஒரு காலத்தில் பத்மராஜனை கேலிக்குரியவராக பார்த்தவர்கள், இப்போது மாணவர்களிடையே 'மனவுறுதி' குறித்துப் பேசுமாறு அழைக்கப்படுகிறார்; தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை விளக்க, அவர் தனது தேர்தல் பிரச்சார அனுபவங்களையே உதாரணமாகப் பயன்படுத்துகிறார்.

தேர்தலில் களம் கண்டு தோல்வியை மட்டுமே சந்திக்கும் இவரது இந்த வினோத ஆசையால் வேட்பாளருக்கான டெபாசிட் மட்டுமே சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறுகிறார். அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு 6273 வாக்குகளை பெற்றதே இவரது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார்.

இவர் முதல்முதலில் 1988-ம் ஆண்டு தேர்தல் களத்தில் தனது வேட்புமனு தாக்கல் பயணத்தை தொடங்கினார். ஜனாதிபதிக்கு 6 முறையும், துணை ஜனாதிபதிக்கு 7 முறையும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள இவர், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராகவும், எம்பி தேர்தலில் பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோருக்கு எதிராகவும் மனுதாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சொந்த தொகுதியான மேட்டூரில் தனது தேர்தல் வரலாற்றில் 253-வது முறையாக வருகிற 30-ம்தேதி வேட்புமனு தாக்க செய்கிறார்.

இதையும் படியுங்கள்:
239 - வது முறையாக வேட்பு மனு தாக்கல்- தேர்தல் மன்னன் பத்மராஜனின் குறிக்கோள் என்ன?
பத்மராஜன்...

அடுத்து தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாகவும் அதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல் 1-ம்தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com