மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டத்தில் ஒருவரே ரூ.2000 வாங்கலாம்... வெளியான புதிய அப்டேட்...!!
இந்தியாவில் இன்றும் கூட பல இல்லத்தரசிகள் அன்றாட செலவுகளுக்குக் கூட கணவரையே சார்ந்திருக்க வேண்டிய நிலையே உள்ளது. எனவே, இத்தகைய நிலையை போக்கி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்(Kalaignar Magalir Urimai Thogai).
இந்த திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் 15-ம் தேதி ரூ.1000 பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.
அந்த வகையில், குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் விருப்பப்படி உயர்கல்வியை தொடர கொண்டு வரப்பட்டது தான் புதுமைப் பெண் திட்டம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.
அந்த வகையில் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் பயனடைந்து கொண்டும் இருப்பீர்கள்.
ஆனால், இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் ஒருவர் பயனாளியாக இருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.2000 பெற முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைதான்.
அதாவது நீங்கள் படித்த பெண்களாக இருந்து திருமணமாகி படிப்பை தொடர முடியாமல் போயிருந்தால், நீங்கள் உடனே கல்லூரிகளில் உங்களுக்கு விருப்பமான டிகிரியில் மீண்டும் கல்வியை தொடர வேண்டும். இதன் மூலம் நீங்கள் புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளியாவதுடன் உங்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கட்டாயம் கிடைக்கும்.
அதேநேரத்தில், குடும்ப தலைவி என்ற முறையில் தகுதிகள் இருப்பின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாயை பெற முடியும். அந்த வகையில் இந்த இரு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் ஒருவரே பயனாளியாக இருக்க முடியும். இதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை.
சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் புதுமைப் பெண் திட்டங்களில் பயனாளியாக இருந்த குடும்ப தலைவி ஒருவர் கலந்து கொண்டு தான் இரு திட்டங்களிலும் பயனாளியாக இருப்பதை பெருமையுடன் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலமே ஒருவர் இரு திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பெண்களே இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க. உடனே தகுதி வாய்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகை மற்றும் புதுமைப் பெண் திட்டத்திற்கு விண்ணப்பித்து மாதந்தோறும் 2000 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம்...