Kali Mullah Khan & mango tree
Kali Mullah Khan

ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்களா?அதிசயம் ஆனால் உண்மை!

Published on

கலி முல்லா கான் ஏழாவது வகுப்பில் ஃபெயிலானவர். உத்தரப் பிரதேசத்திலுள்ள இவரது மாஞ்சோலையில் யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்களைத் தரும் மரமத்தை பயிரிட்டுள்ளார். 84 வயது ஆன Padamasree விருது வாங்கின இவரின் பெயர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிங் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தன் வெற்றியைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. ஆனால் மண், தான் நடத்திய சோதனைகள், தனக்கு ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவருட அமைதியான உழைப்பு, 60 வருடங்கள் கழித்தும் தனது விடாமுயற்சி பற்றிப் பேசுகிறார். இதில் தன் முழு உழைப்பு உள்ளதாகக் கூறுகிறார்.

கான் அவர்களின் Grafting தேசிய மற்றும் அகில உலகளவிலும் பேசப்படுவதாக உள்ளது. மற்ற மரங்களிலிருந்து கிளைகளை எடுத்து ஒரு மரத்தின் வேரோடு இணைத்து இப்படி சுமார் 300 வகை மாம்பழங்களை ஒரே மரத்தில் கிடைக்க சாத்தியமாக்கியிருக்கிறார்.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் தன் தாத்தா இறந்த பிறகு மாஞ்செடி வளர்த்து மாந்தோட்டம் நிறுவுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். 1957 ம் வருடம் ஒரு மாமரத்தில் ஏழு வகை மாம்பழங்கள் கிடைக்க பாடுபட்டார். வெள்ளம் வந்து மரம் வீழ்ந்து விட்டது. தன் 22 ஏக்கர் நிலத்தில் விடாது உழைத்து, ஓரே மரத்தில் 300க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் கிடைக்கச் செய்தார். ஒவ்வொன்றும் நிறம் சுவை மணத்தில் வித்தியாசமானது. தான் எவ்வளவு மாஞ்செடிகள் பயிரிட்டுள்ளார் என்பதை கணக்கில் வைக்கவில்லை. "கடவுள் என்னை இயற்கையான விவசாயியாக படைத்துள்ளார் என்கிறார்கள் மக்கள்" என்று கூறும் இவருக்கு 57 வயது மகன் மாந்தோட்ட பராமரிப்பில் உதவியாக இருக்கிறார். "ஒரே மரத்தில் பலவகைகளை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும். உழைப்பும் பொறுமையும் தேவை," என்கிறார் கலிமுல்ல கானின் மகன்.

அல்ஃபோன்சா, லங்க்ரா, தசேரி மற்றும் சௌன்சா போன்ற ஒவ்வொரு மாம்பழ வகைக்கும் ஒரு கதை உண்டு. இவர் தன் புதிய வகை மாம்பழங்களுக்கு அமிதாப் பச்சன், ஐச்வர்யா ராய், மோடி என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார். துபாய் மற்றும் ஈரானில் இருந்து விவசாயிகள் இவரது மாந்தோட்டத்தைப் பற்றி அறிய வருகிறார்களாம்!

இதையும் படியுங்கள்:
நெல் பருவங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
Kali Mullah Khan & mango tree
logo
Kalki Online
kalkionline.com