
வேளாண் வழக்கத்தில் கார், குறுவை, சொர்ணவாரி, தாளடி, நவரை, பிசாணம், பின் பிசாணம், பின் சம்பா, முன் சம்பா என்று நெல் பருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.
கார் பருவம்
இலையுதிர் காலமான கார் பருவம் என்பது வேளாண் வழக்கில் கார் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக்கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
மே முதல் ஜூன் (தமிழ்: வைகாசி முதல் ஆனி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவமானது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் (தமிழ்: ஆவணி முதல் புரட்டாசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக்கொண்ட இந்தக் கார் பருவம், குறுகிய கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
குறுவைப் பருவம்
இலையுதிர் காலமான குறுவைப் பருவம் என்பது வேளாண் வழக்கில் குறுவைப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
ஜூன் முதல் ஜூலை (தமிழ்: ஆனி முதல் ஆடி) வரையிலான மாதங்களில் தொடங்கும். இப்பருவம், செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்தக் குறுவைப் பருவம், குறுகிய கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
சொர்ணவாரி பருவம்
இளவேனிற்காலமான சொர்ணவாரிப் பருவம் என்பது வேளாண் வழக்கில் சொர்ணவாரிப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். ஏப்ரல் முதல் மே (தமிழ்: சித்திரை முதல் வைகாசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம்,
ஜூலை முதல் ஆகஸ்ட் (தமிழ்: ஆடி முதல் ஆவணி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த சொர்ணவாரிப் பருவம், குறுகியக் கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
தாளடி பருவம்
குளிர் காலமான தாளடிப் பருவம் என்பது வேளாண் வழக்கில் தாளடிப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்தத் தாளடிப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
நவரைப் பருவம்
குளிர்காலமான நவரைப் பருவம் என்பது வேளாண் வழக்கில் நவரைப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்ம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். டிசம்பர் முதல் சனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் தொடங்கும் இப்பருவம்,
ஏப்ரல் முதல் மே (தமிழ்: சித்திரை முதல் வைகாசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த நவரைப் பருவம், குறுகியக்கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
பிசாணம் பருவம்
குளிர் காலமான பிசாணப் பருவம் என்பது வேளாண் வழக்கில் பிசாணப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பிசாணப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
பின் பிசாணம் பருவம்
குளிர் காலமான பின் பிசாணப் பருவம் என்பது வேளாண் வழக்கு பின் பிசாணப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி - ஐப்பசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பின் பிசாணப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
பின் சம்பா பருவம்
கோடைக் காலமான பின் சம்பாப் பருவம் என்பது வேளாண் வழக்கில் பின் சம்பாப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
அக்டோபர் முதல் நவம்பர் (தமிழ்: ஐப்பசி முதல் கார்த்திகை) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், மார்ச்சு முதல் ஏப்ரல் (தமிழ்: பங்குனி முதல் சித்திரை) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பின் சம்பா பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.
முன் சம்பா பருவம்
குளிர் காலமான முன் சம்பாப் பருவம் என்பது வேளாண் வழக்கு முன் சம்பாப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
ஜூன் முதல் ஜூலை (தமிழ்: ஆனி முதல் ஆடி) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், நவம்பர் முதல் டிசம்பர் (தமிழ்: கார்த்திகை முதல் மார்கழி) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த முன் சம்பா பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.