வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து இன்று அவசரக் கூட்டத்தை அறிவித்த கமல்!

Kamal hasan
Kamal hasan

தக்லைஃப் படத்திற்காக வெளிநாடு செல்லவிருந்த கமல் திடீரெனப் பயணத்தை நிறுத்திவிட்டு இன்றுக் கட்சியின் அவசர கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

கமலஹாசனின் 234வது படமான தக்லைஃப் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் இணைந்தப் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. இப்படத்தின் பணிகளுக்காக கமல் சில நாட்களுக்கு முன்னர்தான் வெளிநாடு சென்றுத் திரும்பினார். இந்தநிலையில் சில காட்சிகள் செர்பியா நாட்டில் படம்பிடிக்கவுள்ளன.

அதற்கான லொக்கேஷனைப் பார்க்கப் படக்குழு செர்பியாவிற்குச் சென்றுவிட்டது. இதனையடுத்து கமலும் பிப்ரவரி இறுதியில் செர்பியாவிற்குச் செல்லத் திட்டமிட்டார். ஆனால் இப்போது அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரக் கூட்டத்தை அறிவித்துள்ளார். இதனால் படக்குழு கமல் இல்லாதக் காட்சிகளை மட்டும் படம்பித்துவிட்டு நாடு திரும்பவுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அந்தவகையில் திமுகவும் அதன் கூட்டணியுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

தொகுதிப் பங்கீட்டிற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொமதே கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் என தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டிற்கானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் 10 சீட்கள் எதிர்பார்க்கும் நிலையில் திமுக 8 சீட்கள் தர முன்வந்துள்ளதாகத் தகவல். விசிக 3 சீட்களும், மதிமுக 2 சீட்களும் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிந்தப் பாடில்லை.

இந்தநிலையில்தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தலைமையில் சென்னை டி நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு.. ஏன் தெரியுமா?
Kamal hasan

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைவது பற்றிப் பேசப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுடனானப் பேச்சுவார்த்தையில் மநீம கட்சி 2 சீட்கள் கேட்டதாகவும் ஆனால் திமுக ஒரு சீட்டு மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மநீம டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கேட்டதாகவும் ஆனால் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத்தை கமல் ரத்துச் செய்ததாகத் தகவல் வந்துள்ளது. அதேபோல் கூட்டம் முடிந்தவுடன் சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com