கமல்ஹாசனுக்கு உடல் நலக்குறைவு;

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் சென்று மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய நிலையில், கமல்ஹாசன் உடல்சோர்வாகவும் லேசான காய்ச்சல் இருந்ததால், அவர் உடனடியாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்குப் பின் இன்று காலை நலமுடன் வீடு திரும்பினார்.

logo
Kalki Online
kalkionline.com