CM விஜய்யை சந்தித்த பின் கமல் குறிப்பிட்ட வார்த்தை ..! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!

KAMAL - VIJAY
KAMAL - VIJAY
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன்,பிரேமலதா உள்ளிட்ட பல கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதே போல், நடிகரும், மநீம தலைவருமான கமலையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஏனெனில் கமல் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும் என பதிவிட்டிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com