குட் நியூஸ்..! இனி மாணவர்கள் 33 மார்க் எடுத்தால் பாஸ்..!

school
schoolsource:Deccan herald
Published on

தீபாவளி பரிசாக மாணவர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை கல்வி துறை அமைச்சர் கொடுத்துள்ளார். ஆனால் , இந்த மகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது கர்நாடகா மாநிலத்தில். அங்கு பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி படிப்புகளுக்கான பாஸ் மார்க்கை குறைத்துள்ளார்கள்.இந்த ஆண்டு முதல், தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி மதிப்பெண் 33 ஆகவும் 12 வது(PUC) படிப்பிற்கு தேர்ச்சி மதிப்பெண் 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 ஆம் வகுப்பு மற்றும் பியூசி தேர்ச்சி மதிப்பெண்கள் 35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்நாடகா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா வெளியிட்டுள்ளார். இனி எஸ்எஸ்எல்சி தேர்வில் 625க்கு 206 மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று கூறினார். இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் தேர்வுகளில் மொத்தமாக ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திலும் இன்டர்னலில் 20க்கு 20 மதிப்பெண்கள் பெற்று விட்டால் , எழுத்துத் தேர்வில் வெறும் 13 மார்க் பெற்றாலே அவர் தேர்ச்சி பெற முடியும். முன்பு எழுத்து தேர்வில் கட்டாயம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நடைமுறையும் நீக்கப்பட்டுள்ளது. முன்பு இன்டர்னலில் 20/20 மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவை 7 மதிப்பெண்ணாக மட்டுமே கணக்கிடப்பட்டு , எழுத்து தேர்வில் கட்டாயம் 28 மதிப்பெண்ணை பெற வேண்டிய அவசியம் இருந்தது.

இதையும் படியுங்கள்:
பென்சன் வாங்குவோருக்கு குட் நியூஸ்..! இனி ஆயுள் சான்றிதழ் வீடு தேடி வரும்..!
school

இதேபோல், பியூசி(PUC )படிப்பிற்கு 600க்கு 198 மதிப்பெண்கள் பெற்றாலே அவர் தேர்ச்சி பெறுவார். மேலும் ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண்கள் பெற்றால் அவர் தேர்ச்சி அடைந்து விடுவார்.இந்த புதிய விதி இந்த ஆண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும், இந்த மாற்றம் CBSE மாதிரியைப் பின்பற்றும் மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

தேர்வுகளை மிகவும் வெளிப்படையாக நடத்த கடந்த காலங்களில் ஒரு வலை ஒளிபரப்பு முறை செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, மாணவர்களின் முடிவுகளை மேம்படுத்துவதற்கும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கும் ஆசிரியர்கள் அதிக பொறுப்பை ஏற்றுக்கொண்டனர், இதனால் தேர்வுகளில் சிறந்த முடிவுகளைப் பெற முடிந்தது.மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) முறையில் SSLC தேர்வை எதிர்கொள்ளும்.

இந்த விதி 2025-26 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். இந்த ஆண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், மீண்டும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தனியார் தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். இந்த முடிவு கல்வி பயிலும் முறையை எளிமையாக்க உதவும் என்று அமைச்சர் பங்கராப்பா கூறியுள்ளார். இந்த நடைமுறை முன்பே சிபிஎஸ்சி கல்விமுறையை அடிப்படையாகக் கொண்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com