கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மார்ச் 29 தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார்.

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை எடியூரப்பாவும், ஒருமுறை குமாரசாமியும், ஒரு முறை பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர்.

அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப் 13.

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப் 20

வேட்புமனு பரிசீலனை ஏப் 21

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப் 24

வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13

கர்நாடகாவில் முதல் முறை வாக்களர்கள் 9.17 லட்சம் பேர் என்றும், கர்நாடகாவில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 42,756 பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சியினர் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களம் இனி சூடுபிடிக்க துவங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com