வகுப்பறையில் இனி ஹிஜாப் அணியலாம்! - கர்நாடகாவில் மீண்டும் மாறிய விதிகள்..!

Hijab
Hijab
Updated on

கர்நாடகாவில் மத அடையாளங்களை முன்னிலப்படுத்தும் ஆடைகளை அணிய பாஜக அரசு விதித்திருந்த தடை நீங்கியது. இனி தனி மனிதரின் மத அடையாளங்களாக கருதப்படும் ஹிஜாப், பூணூல், ருத்ராட்சம் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

"கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2022-ம் ஆண்டில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடை... ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது. நாங்கள் இது குறித்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அதாவது பி.யூ.சி. வரை மாணவ-மாணவிகள் தங்களின் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணியலாம். அதாவது ஹிஜாப், பூணூல், கைகளில் கட்டப்படும் புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை உள்ளிட்டவற்றை அணியலாம். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என நேற்று பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் முக்கியத்துவம் பெறுகிறது. 2022ல் கர்நாடகாவில் உடுப்பி கல்லூரியில் பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் வகுப்பறைகளில் அனுமதிக்கப்படாததால் பெரும் பிரச்சினை ஆனது . இந்த ஹிஜாப் விவகாரம் அப்போது நாடு முழுவதும் அரசியல் மற்றும் சட்டம் குறித்த பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்றதில் அப்போது இருந்த பாஜக அரசின் அழுத்தம் காரணமாக கர்நாடக ஹைகோர்ட் மத அடையாளங்களை பள்ளி மற்றும் கல்லூரியில் பயன்படுத்தக் கூடாது எனும் தடையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து ஆடை அணியும் சுதந்திரம் கூட இல்லை எனும் வாத விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய அரசு அத்தடையை திரும்பப் பெற்றது.

பாஜக அரசு கொண்டு வந்திருந்த “ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடைகள் மீதான கட்டுப்பாடு” தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசு மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் யூனிபார்முடன் சேர்த்து சிறிய அளவில் மத மற்றும் பாரம்பரிய அடையாளங்களை அணிய அனுமதி மற்றும் ஹிஜாப், துர்பான், புனித நூல் (ஜனிவாரா), ருத்ராட்சம் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.

கல்வி உரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக "மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு" என இந்த தடை நீக்கம் குறித்து கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அரசு இதை “அனைவரையும் உள்ளடக்கும் கல்வி சூழல்” உருவாக்கும் நடவடிக்கை என விளக்கினாலும் இந்த அறிவிப்புக்கு பாஜக, இது வாக்கு வங்கி அரசியல் எனவும் வகுப்பறைகள் மத அடையாள காட்சிக்கான இடமாக மாறக்கூடாது என்றும் விமர்சித்து இந்த தடை நீக்கம் மீதான தங்கள் அரசியல் எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ் சொன்ன முதல்வர்..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
Hijab
logo
Kalki Online
kalkionline.com