குட் நியூஸ் சொன்ன முதல்வர்..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Government Employees
TN Government
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.58%ஆக உள்ள அகவிலைப்படி 60%ஆக உயர்த்தப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், தமிழக முதல்வர் விஜய் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
பட்டாசு நகரின் 'புரட்சிப் பெண்': சிவகாசியின் முதல் பெண் MLA/அமைச்சர் ச. கீர்த்தனா!
Government Employees
logo
Kalki Online
kalkionline.com