

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு வரும் அர்விந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவுக்கு ஆதரவாக ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறும் பிரச்சார பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களின் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 2023ல் அதிகார மசோதா எதிர்ப்பு மற்றும் 2022-ல் 'புதுமைப்பெண்' திட்டத் தொடக்க விழா ஆகியவற்றிற்காகவும் அவர் சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஓரிரு நாளில் தமிழ்நாட்டில் பரப்புரை செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.