மரணச் சுழலில் கேரளா: விஷப் பாம்புக்கடி 'பொது சுகாதார அவசரநிலை' என அறிவிக்கப்பட்டது ஏன்..?

Coiled Russell’s viper next to colorful Kathakali design
Viper danger meets Kathakali. Kerala’s public health crisis.
Published on

அழகிய இயற்கையின் வரப்பிரசாதம் எனப் போற்றப்படும் கேரளா, இன்று தன் பசுமைக்குப் பின்னால் ஒரு கசப்பான உண்மையைப் பதுக்கி வைத்திருக்கிறது.

விஷப் பாம்புகளின் பன்முகத்தன்மையில் தேசிய அளவில் மேற்கு வங்காளத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் இம்மாநிலம், தற்போது பாம்புக்கடி நச்சுத்தன்மையை (Snakebite Envenomation) ஒரு சாதாரண அச்சுறுத்தலாகக் கருதாமல், உயிரைப் பறிக்கும் பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்துள்ளது.

இந்த அவசர நடவடிக்கை, கள நிலவரத்தின் தீவிரத்தையும், இம்மாநில மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பேராபத்தையும் அழுத்தமாக உணர்த்துகிறது.

அதிர்வலைகளை ஏற்படுத்திய புள்ளிவிவரங்கள்

இந்த நெருக்கடியின் ஆழத்தை எண்கள் மிகக் கோரமாகப் பிரதிபலிக்கின்றன. தேசிய சுகாதார இயக்கத்தின் அறிக்கைகளின்படி, கேரளாவில் ஆண்டுதோறும் 3,000-க்கும் மேற்பட்ட தீவிர பாம்புக்கடி சம்பவங்கள் பதிவாகின்றன.

ஒவ்வொரு வருடமும், 8,000 முதல் 12,000 மக்கள் மரணத்தின் விளிம்பில் நின்று, அரசு மருத்துவமனைகளில் அலறிக்கொண்டிருக்கின்றனர்.

வனத்துறையின் SARPA தரவுகள் காட்டுவது என்னவென்றால், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், சராசரியாக ஆண்டுக்கு 110 விலைமதிப்பற்ற உயிர்கள் இந்தக் கொடிய நஞ்சுக்குப் பலியாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை ஒரு தேசத்தின் மனசாட்சியை உலுக்க போதுமானது.

ஓர் இளம் உயிரின் பலி: நீதி மன்றத் தலையீடு

இந்தப் பிரச்சனை கவனிக்கப்படாத ஒரு புள்ளியல்ல என்பதை நிரூபித்தது, 2019-இல் வயநாட்டில் நிகழ்ந்த துயரச் சம்பவம்.

ஒரு அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி பாம்புக்கடியால் உயிர்துறந்த கோர நிகழ்வு, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த உயிரிழப்பு ஒரு விபத்து மட்டுமல்ல; முறையான பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் இன்மையால் நிகழ்ந்த நிறுவனத் தோல்வி என்றே நீதிமன்றம் அதனைக் கருதியது.

இதன் தொடர்ச்சியாகவே, மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பாம்புக்கடியை ஒரு கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக (Notifiable Disease) அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் மூலம், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து, கேரளாவும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

மௌனமான கொலையாளிகள்: சிறுநீரகங்களைச் சிதைக்கும் ரகசியம்

சாதாரணமாக நாம் அறிந்திருக்கும் கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு ஆகியற்றுடன், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மட்டுமே உரித்தான ஒரு கொடிய ரகசியம் பதுங்கியுள்ளது.

திமில் மூக்குக் குழி விரியன்  (Hump-nosed Pit Viper). இதன் விஷம் மிகவும் ஆபத்தானது; இது மெதுவாகச் செயல்பட்டு, மனிதர்களின் சிறுநீரகங்களைச் சிதைத்து (Severe Renal Complications) மரணத்தை ஏற்படுத்துகிறது.

கிராமப்புறங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகாமையில் வாழும் மக்கள், அறியாமலேயே இந்த நச்சு உயிர்களுடன் ஒவ்வொரு நொடியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

விடிவெள்ளி: உயிர் காக்கும் இறுதி முயற்சி

இந்த அவசரநிலையை எதிர்கொள்ளும் விதமாக, கேரளா பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது.

இது உலக சுகாதார நிறுவனம் (WHO) சொன்ன வேலைதான். 2017-லேயே WHO பாம்புக்கடியை யாரும் கண்டுக்காத 'புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்'னு அறிவிச்சது.

அது மட்டுமில்லாம, 2030-க்குள்ள பாம்புக்கடியால வர்ற இறப்புகளை பாதியா குறைக்கணும்னு ஒரு பெரிய இலக்கையும் வச்சது.

இப்போ கேரளா எடுத்திருக்கிற இந்த புது முடிவு, WHO-வோட உலக இலக்கிற்கு ஏத்த மாதிரி மாநிலத்தோட சுகாதாரக் கொள்கையைச் சீரமைக்குது.

  1. விஷமுறிவு மருந்துச் சங்கிலி: உயிர் காக்கும் Anti-Venom மருந்துகளின் இருப்பு மற்றும் விநியோகம் வலுப்படுத்தப்பட்டு, எவ்விதத் தடையும் இல்லாமல் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய உறுதி செய்யப்படுகிறது.

  2. சிகிச்சைத் தரப்படுத்துதல்: சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க, புதிய தேசிய வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை நெறிமுறைகள் தரப்படுத்தப்படுகின்றன.

  3. SARPA எனும் கவசம்: வனத்துறையின் SARPA (Snake Awareness, Rescue and Protection) செயலியானது, சான்றளிக்கப்பட்ட பாம்பு மீட்பர்களுடன் பொதுமக்களை இணைத்து, சம்பவத் தரவுகளைப் பதிவு செய்கிறது.

  4. முதலுதவிக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கும் இந்தச் செயலியின் ஒருங்கிணைந்த முயற்சியால்தான், சமீபத்திய ஆண்டுகளில் உயிரிழப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள்ளே பாம்பு! உங்கள் அழைக்கப்படாத விருந்தாளியைச் சமாளிக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Coiled Russell’s viper next to colorful Kathakali design

இனி, பாம்புக்கடி என்பது தனிப்பட்ட ஒருவரின் துரதிர்ஷ்டமாகப் பார்க்கப்படாது; அது அரசின் ஒருங்கிணைந்த கவனத்தைக் கோரும் ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

உங்களின் விழிப்புணர்வே, உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு என்பதை மறவாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com